Wednesday, November 23, 2011

மறைமுக பார்வையில் என்னை கவனிக்க செய்கிறாள்
கடந்து செல்கையில் தோழியின் பேச்சை மறுக்க செய்கிறாள்
எதிரினில் வருகையில் கண்களால் தீண்டுகிறாள்
சிநிகிடும் போது அவள் கொஞ்சலில் என் பெயர்

Monday, November 21, 2011

கனவுகள் கண்டேன் , அதில் அவள்
பிறந்தாள் சிரித்தாள் வெறுத்தாள் மறுத்தாள்
ஆனால் பிரியமட்டும் இல்லை
மாறாக நிஜங்களில் இருந்து பிரிந்தாள்


Monday, October 31, 2011

என்றைக்கும் இல்லாமல் இன்று ஏன் இத்தனை பேர் என்னை பார்க்க வந்தனர்
அதோ அவர்கள் என்னை எதிர்த்தவர்கள்
இதோ இங்கே இருப்பவர்கள் என் பின்னல் என்னை நகையாடியவர்கள்
அங்கே என்னை அலங்காரம் செய்ய நிறைய பொருள்கள் இருக்கின்றன
இங்கே என்னை ஏளனம் செய்தவர்கள் வருசையில் நிக்கின்றனர்
எல்லாம் எனக்கு புதியதாக இருகின்றது
நான் எப்படி சில மணித்துளிகளில் புகழ்லப்பெற்றேன்
ஆம் நான் இன்று இறந்து போனேன் ...


நிலமும் மழையும் நட்பு கொண்டன மழையால்
காற்றும் மரமும் நட்பு கொண்டன இலையால்
தீயும் திரியும் நட்பு கொண்டன தீபத்தால்
மனிதனும் மனிதனும் நட்பு கொண்டனர் பசியினால்
நஞ்சுன்ன வைத்தீர்
புறம் பேச செய்தீர்
பலிசொல்லுக்கு ஆளாக சொன்னீர்
தீதொன்றும் இல்லை பிறரை கொலைசெய்ய சொன்னீர்
ஏமாற்ற சொன்னீர் பிறர் துன்பங்களில் இன்பத்தை புசிக்க செய்தீர்
தாமதிக்க செய்தீர் பிறர் நலன் பேணா என்றீர்
இவ்வனைத்தையும் செய்தேன் ஊருக்கு நான் கெட்டவன் ஆனேன்
ஏய் சமுகமே உனக்கு தான் என்னை போல் எத்தனை அடிமைகள் !


Friday, October 28, 2011

கடவுள் நம்பிக்கை இல்லை என்றேன் ஆனால்
பெயரில் கிருஷ்ணனை கொண்டேன்
என்ன செய்வது பெயருக்கும் செயலுக்கு எப்போதும் சமந்தம் இல்லை .
கொடியவன் ஆகினேன் இன்று
என் சமுகத்தின் விரோதி ஆனேன்
ஆம் நான் சோம்பேறி ஆனேன் !
இன்றை சூழலில் மக்களிடம் பொறுமை இல்லை
அவர்களின் வார்த்தையில் நேர்மை இல்லை
இது எழுதும் என்னிடம் இருக்குமா என்று நீங்கள் கேற்பது எனக்கு புரிகிறது
இல்லை என்பதே எனது பதில் ஆகும்.
மறுகின்றேன் என் பிழைகளை
யார் சொல்லும் ,என் தவறினை எதிர்கிறேன்
தேய்கிற நிலவு போல் என் நலன்களும் குறையுது
இதை மாற்றுவது எப்படி ?
நிலை தேறுவது எப்படி?
விதிகளின் மீறலில் நான் வாழ்கிறேன்
கடந்த பாதையும் மறந்தன
இருக்கும் நேரமும் பிரிந்தன
நதியினில் விழுந்த சருகினைப் போல
காலத்தின் பிடியினில் அடிமையாய் போனேன்
என் கைகளில் இருக்கும் ரேகையைப் போல நான் யாருக்கும்
உதவாமல் போவேனோ ?





Monday, October 24, 2011

குண்டுகட்டாய் என்னை கொண்டு செல்கின்றன
என் ஆசைகள் ,
எங்கே செல்கிறோம் என கேட்டேன் , அதற்க்கு அவை சொன்னன
உன்னைப்போல் பலரும் வசிக்கும் அமைதி இல்லா வீட்டுக்கென்று .
கொன்றேன் பலப்பேரை, நான் கொன்றேன் பலப்பேரை
இரத்தம் இல்லை கதறல் இல்லை கத்தி இல்லை துப்பாக்கி இல்லை
என் வார்த்தையால் கொன்றேன்

பற்றி எரிந்தது அவள் வயிர்


காரணம் பலரலால் சொல்லப்பட்டன


ஆனால் யாருக்கும் தெரியவில்லை அவளுக்கு தேவை


ஒருவேளை சோறு என்று

Friday, September 16, 2011

உன் பாதங்களில் என் முகம் புதைக்கவில்லை
உன் சின்ன கைகளில் என் விரல்கள் படவில்லை
உன் விழிகளால் என் முகம் பார்த்ததில்லை
உன் சிரிப்பினை நான் கண்டதில்லை
உன் மேல் விசும் பால் வாசம் உணரவில்லை இருந்தும்
இந்த பொல்லாத மனது என்றும் உன் நினையில்
இப்படிக்கு உன் தகப்பன் !

Friday, September 02, 2011

என் முன்னால் நிறைய நிழல்கள்
அவை அனைத்தும் ஒன்றாக இல்லை
என் கண்கள் பெரிய நிழல்களை தேடுகிறது
ஏனோ மனது எதிலும் பெரியதையே விரும்புகிறது
ஆனால் முன் இருக்கும் சூரியன் மறைந்தால்
இந்த நிழல்கள் அனைத்தும் மறைந்துவிடும் என மனதுக்கு தெரிவதில்லை